தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு - 71ஆவது குடியரசு தின விழா

திருச்சி: குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

trichy-airport-3-tier-security-security-prodection
திருச்சி விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

By

Published : Jan 22, 2020, 1:22 PM IST

நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா ஜன.26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருச்சி விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

திருச்சி விமான நிலையத்தில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு நடைமுறையில் இருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு அதனை மூன்று அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை செய்த பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கின்றனர். இது தவிர வாகனங்கள் உள்ளே நுழையும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய வீரர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். விமானங்களில் பயணம்செய்ய உள்ளே செல்லும் பயணிகளும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், விமான நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஜன.30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக பார்வையாளர் மாடமும் ஜன.30ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details