இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ 14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! - திருச்சி
திருச்சி: இலங்கையில் இருந்து 14.8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த பயணி திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார்.
திருச்சி விமான நிலையம்
அப்போது, இலங்கையைச் சேர்ந்த சவரிமுத்து ஆண்டனி செபாஸ்டின் என்ற பயணி தனது உடலில் மறைத்து வைத்திருந்த 464 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 14.8 லட்சம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.