தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கூட்டத்தில் ரகளை: நாற்காலிகள் உடைப்பு!

திருச்சி: பதவி கிடைக்காத விரக்தியில் அதிமுக கூட்டத்தில் சிலர் கைகலப்பில் ஈடுபட்டு, நாற்காலிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 trichy  AIADMK meeting riot: chairs broken
trichy AIADMK meeting riot: chairs broken

By

Published : Sep 13, 2020, 4:25 PM IST

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கபவனம் திருமண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் துவங்கியதும் மண்டபத்திற்குள் மஞ்சள் நிறக்கொடியுடன் புகுந்த 30 பேர் திடீரென மேடையை நோக்கிச் சென்று சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்து, திடீரென அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து அடித்தனர்.

இதனால் கூட்டத்தினர் ஓடினர். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி வந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். அதைத் தொடர்ந்து தகறாறு செய்தவர்கள் வெளியேறிய பின்னர் கூட்டம் நடந்தது.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது, ”திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் பதவியை மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது உறவினர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் தான் தகறாறு செய்தனர்.

மேலும் முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தரராஜன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details