திருச்சி:அதிமுக திருச்சி மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் தமிழரசி சுப்பையா இன்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் நேற்று திமுகவில் இணைந்த அவரது கணவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், அன்பழகன், கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்த அதிமுக மகளிரணி செயலாளர் - tn politics
அதிமுக திருச்சி மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான தமிழரசி சுப்பையா இன்று (ஜூலை 23) திமுகவில் இணைந்தார்.
அதிமுக திருச்சி மகளிரணி செயலாளர் திமுகவில் இணைந்தார்
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிவிப்பினால், அதிருப்தியில் இருந்த அதிமுக திருச்சி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்நேற்று திமுகவில் இணைந்தார். தற்போது அவரது மனைவி தமிழரசியும் திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘அதிமுக அழிவை நோக்கி செல்கிறது’- ஜான்பாண்டியன்