தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் முதல் கைது! - Pocso

திருச்சி: குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பகிர்ந்ததால் ஏசி மெக்கானிக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil nadu child pornography arrest
Tamil nadu child pornography arrest

By

Published : Dec 12, 2019, 1:39 PM IST

திருச்சி பாலக்கரை காஜா பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்(42). ஏசி மெக்கானிக்கான இவர் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து, திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிறிஸ்டோபர், குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பகிர்ந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி வனிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் முதல் கைது

கிறிஸ்டோபர் அல்போன்ஸ் மீது போஸ்கோ சட்டம் 13, 14, 15 ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 ஏ, பி, பி, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தம்பி மரணத்தில் நீடிக்கும் மர்மம் - அண்ணனிடம் போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details