திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி அனிதா சதீஸ் தலைமையில் சுமார் 50 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் முன்னிலையில், இவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு குமார் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராவணன், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், பகுதி செயலாளர்கள் கோபால்ராஜ், பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கே விஸ்வாசமாக இருக்க வேண்டும் - ஓபிஎஸ்