திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே, லோகோ ஷெட்டில் பராமரிப்புப் பணிகள் முடிந்து ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் இன்று (நவ.16) மாலை தடம் புரண்டது.
திருச்சி - சென்னை வழித்தடத்தில் திருச்சி ஜங்ஷன் மற்றும் கோட்டை ரயில் நிலையங்கள் பிரதானமானவை. அதேபோல் பொன்மலை பணிமனையில், ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகள் பழுது பார்க்கப்படும். இது தவிர, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ரயில் பராமரிப்புப் பணிக்கான லோகோ செட் உள்ளது.
இன்று மாலை 3 மணி அளவில் இந்த லோகோ செட்டில் இருந்து பராமரிப்புப் பணி முடிந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 50 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் புறப்பட்டது. ஆனால், ரயில் நிலையத்திற்கு வரும் முன்பாகவே இன்ஜினில் இருந்து 2 மற்றும் 5ஆவது பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.