தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காந்தி மார்க்கெட் திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் - மார்க்கெட் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி: காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்

By

Published : Sep 7, 2020, 3:16 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுவருவதால் திருச்சி காந்தி மார்க்கெட்டை உடனடியாக திறக்க வலியுறுத்தி சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர் தலைமையில்,.எல்.எப் மாநில துணைச்செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் சிஐடியு, எல்.எல்.எப் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து சிஐடியு மாநில மாவட்ட செயலாளர் ரங்கராஜன் கூறுகையில்,

திருச்சி மக்களின் பாரம்பரிய சந்தையாக காந்தி மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் அருகில் உள்ள பல மாவட்ட மக்களும், விவசாயிகளும் விளைப்பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் இடமாக உள்ளது. காந்தி மார்க்கெட்டில் சுமார் 500 கமிஷன் மண்டிகளும், 2 ஆயிரத்து 500 சில்லரை கடைகளும் உள்ளன. இதை நம்பி மூன்று ஆயிரம் வியாபாரிகளும், 5 ஆயிரம் கூலித் தொழிலாளர் குடும்பங்களும் உள்ளன.

இந்நிலையில் திருச்சி நகரத்திற்கு வெளியே 17 கி.மீ. தூரத்தில் மணிகண்டம் அருகே வேளாண் விற்பனைத் துறை மூலம் சுமார் 250 கடைகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமில்லாத வணிகம் செய்ய பொருத்தமற்ற இடத்தில் காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதென முடிவெடுத்திருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.

காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சிக்னல் அமைத்தல், ஒருவழிசாலையாக மாற்றுவது, இரவு நேரங்களில் மட்டும் கனரக வாகனங்களை அனுமதிப்பது அல்லது உரிய நேரம் ஒதுக்குவது என திட்டமிட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். மேலும் கடந்த நான்கு மாத காலமாக பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் காய்கறி மார்க்கெட்டை மாற்றி கழிப்பறை, குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தொழிலாளர்களை வேலை செய்ய வைப்பது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே உடனே காந்தி மார்கெட்டை திறக்க வேண்டும் என்றார். இந்த காத்திருப்பு போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details