தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் சுவாரஸ்யம்: முத்துக்குமார் Vs முத்துக்குமார்...! - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022

திருச்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் முத்துக்குமாரும், பாஜக வேட்பாளர் முத்துக்குமாரும் மாறிமாறி வாக்குச் சேகரித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில்
திருச்சியில்

By

Published : Feb 13, 2022, 11:01 PM IST

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், திருச்சியில் ஐந்தாவது வார்டில் போட்டியிடும் மதிமுக, பாஜக வேட்பாளர்கள் இருவர் பெயரும் முத்துக்குமார் ஆகும். நேற்று (பிப்ரவரி 12) மாலை பாஜக வேட்பாளர் முத்துக்குமார் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மதிமுக வேட்பாளர் முத்துக்குமாரிடம் தனக்கு வாக்களிக்க கோரி துண்டுப்பிரசுரம் வழங்கினார். பதிலுக்கு மதிமுக வேட்பாளர் முத்துக்குமாரும் தனக்கு வாக்களியுங்கள் எனக் கூறினார். இந்தச் செயல் அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ஸ்டாலினுடன் மம்தா உரையாடல்: விரைவில் எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details