தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய கல்விக்கொள்கை, நீட் தேர்வுக்கு எதிராக பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் - Manapparai protest

திருச்சி: மணப்பாறையில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் சிலை முன்பு கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest

By

Published : Sep 17, 2020, 3:20 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரவுண்டானாவில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பெரியார் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலாளர் தங்கராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் சத்தியசீலன், சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் ஷாஜகான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் சட்டையில் கருப்பு பட்டை அணிந்தும், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதேபோல் கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த தினத்தில் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி கருப்புப் பட்டை அணிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம், தந்தை பெரியார் கழகம், சாமானிய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதிதிராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கரூர் மாவட்ட துணைத் தலைவர் ஹோசிமின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து கலந்துகொண்டு தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details