திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்த்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்திற்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
சுஜித் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி - கல்லறைக்குக் கொண்டுவரப்பட்ட உடல்! - அமைச்சர்கள் அஞ்சலி
திருச்சி: உயிரிழந்த சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். புதூர் கல்லறைக்கு சுஜித்தின் உடல் கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
sujith
உடற்கூறாய்வுக்குப் பின்னர் சுஜித்தின் உடல் சவப்பெட்டியில் வைத்து மருத்துவமனைக்கு வெளியே கொண்டுவரப்பட்டது.
மருத்துவமனை வாயிலில் சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நடுக்காட்டுப்பட்டியில் உள்ள புதூர் கல்லறைக்கு சுஜித்தின் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
Last Updated : Oct 29, 2019, 7:40 AM IST