தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய கே.என். நேரு - சனி மூலையில் இருந்து சதிராட்டம்

ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் கே.என். நேரு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பரப்புரை
அமைச்சர் கே.என்.நேரு தேர்தல் பரப்புரை

By

Published : Feb 12, 2022, 5:57 PM IST

Updated : Feb 12, 2022, 8:08 PM IST

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கே.என். நேரு இன்று (பிப்ரவரி 12) தனது பரப்புரையை ஸ்ரீரங்கம் பகுதியில் காலை 9 மணிக்குத் தொடங்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் 10.45 மணிக்குதான் அவர் மண்டபத்திற்கு வந்தார். ஏன் என விசாரித்தபோது சனிக்கிழமை என்பதால் ஒன்பது மணியிலிருந்து பத்தரை மணி வரை ராகு காலம் என்பதால் சற்று தாமதம் ஆகி விட்டதாம்.

சனி மூலையிலிருந்து...

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குள்பட்ட ஐந்தாவது வார்டில் போட்டியிடும் முத்துக்குமார் என்பவருக்கு பம்பரம் சின்னத்தில் வாக்குகள் கேட்டு கே.என். நேரு பரப்புரையை நிறைவுசெய்தார். பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஸ்ரீரங்கத்தில் தொடங்கி திருவானைக்கோவில் வரை பரப்புரை செய்வது வழக்கம்.

கே.என். நேரு தேர்தல் பரப்புரை

கே.என். நேரு திருவானைக்கோவிலில் தொடங்கி ஸ்ரீரங்கத்தில் பரப்புரையை நிறைவுசெய்தார். ஏன் எதற்கு என திமுகவினர் பேசிக்கொண்டிருந்த தகவலும் நம்மை வந்தடைந்தது.

கே.என். நேரு தேர்தல் பரப்புரை

சனி மூலையிலிருந்து பரப்புரையை அவர் தொடங்கினாராம். வெற்றி நிச்சயம் எனக் கருதியதால் அங்கிருந்து கே.என். நேரு பரப்புரையைத் தொடங்கியதாகத் தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க:நர்சரி பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி

Last Updated : Feb 12, 2022, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details