திருச்சி:108 வைணவ தலங்களில் முதன்மையானதும் 'பூலோக வைகுண்டம்' என பக்தர்களால் அழைக்கப்படுவது, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று (ஜன.17) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில், சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி ஆகிய முக்கிய சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் தாயர் சன்னிதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, "நம்முடைய வாழ்க்கையில் கோயில்கள் மையமாக அமைந்துள்ளன.