தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து போராட்டம்! - மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து போராட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து திருச்சி, திருவாரூர் ஆகிய பகுதிகளில் மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து போராட்டம்!
மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து போராட்டம்!

By

Published : Dec 21, 2020, 11:11 PM IST

தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்று திருச்சியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 32 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியார் விடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மின்சார வாரியத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சிஐடியு, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐக்கிய சங்கம், ஐஎன்டியூசி, பெடரேஷன் சங்கம், பொறியாளர்கள் சங்கம் ஆகியவை ஆதரவளித்தன. இந்தப் போராட்டம் காரணமாக மின்வாரிய பணிகள் இன்று தடைபட்டன. இதனால் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமலும், மின்சார குறைகளை தெரிவிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து போராட்டம்

திருவாரூரில்..

திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக முன்பு அனைத்து தொழிலாளர் நலச் சங்கத்தினர், ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை எண் 82-ஜ உடனே ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளும் இதில் வலியுறுத்தப்பட்டன

இதையும் படிங்க:மின்வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைப்பு!

ABOUT THE AUTHOR

...view details