தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி- ஹைதராபாத் நேரடி விமான சேவை தொடக்கம் - திருச்சி- ஐதராபாத் நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சி: திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு புதிதாக நேரடி விமான சேவை நேற்று இரவு முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Trichy to Hyderabad flight

By

Published : Oct 28, 2019, 4:51 PM IST

திருச்சியிலிருந்து சென்னை, சிங்கப்பூருக்கு விமானம் இயக்கப்பட்டுவருகிறது. இதன் மற்றொரு சேவையாக திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு நேரடி விமான சேவை நேற்று இரவு முதல் தொடங்கியது.

தினமும் இரவு 11.30 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமான நிலையத்தின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விமானமானது பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11.50 மணிக்கு ஹைதராபாத் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ஹைதராபாத்திலிருந்து திருச்சிக்கு 37 பயணிகள் பயணம் செய்தனர். மீண்டும் இந்த விமானத்தில் திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு 48 பயணிகள் பயணம் செய்தனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கை.

திருச்சி- ஹைதராபாத் விமான சேவை தொடக்கம்

திருச்சியிலிருந்து - ஹைதராபாத் விமானத்தின் மூலம் நேரடியாக மும்பை, டெல்லிக்கு முன்பதிவு செய்துகொண்டு திருச்சி - ஹைதராபாத் வழியாக இணை விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த விமான சேவை இருக்கும்.

இதையும் படிக்க: தூத்துக்குடி விமான நிலையம் 2020க்குள் சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்படும்!

ABOUT THE AUTHOR

...view details