தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரின் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து - trichy district news in tamil

திருச்சி மணப்பாறை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரின் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய லாரியை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

tipper-lorry-accident-in-trichy-manaparai-which-is-involved-in-land-theft
மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகரின் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

By

Published : Sep 5, 2021, 10:00 AM IST

திருச்சி:மணப்பாறை அருகே பிள்ளையார் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் (செப்.3) இரவு மணல் கடத்தி சென்ற டிப்பர் லாரி நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற புத்தாநத்தம் காவலர்கள், காயமடைந்த லாரி ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் (39) மற்றும் உதவியாளர் அஜித்குமார் (21) ஆகிய இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த காவலர்கள், மணல் கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், மணல் கடத்தலில் பயன்படுத்தபட்ட டிப்பர் லாரி, வடக்கு இடையபட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் நாகராஜ்- கலைசெல்வி ஆகியோரின் மகன் தர்மராஜ் (30) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மணல் கடத்தலில் தொடர்புடைய தர்மராஜ், டிரைவர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்த புத்தாநத்தம் காவலர்கள் தலைமறைவான திமுக ஒன்றிய கவுன்சிலரின் மகனைத் தேடி வருகின்றனர்.

தர்மராஜ் மீது கடந்த மாதமும் மணல் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்படாமல் இருந்ததது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காற்றாடியை பிடிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details