தமிழ்நாடு

tamil nadu

பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டர் கும்பல் கைது!

By

Published : May 14, 2021, 8:17 PM IST

திருச்சி: போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய மூவரை சென்னை அடையாறு சைபர் க்ரைம் காவல் துறையினர் கைது செய்தனர்

பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டர் கும்பல் கைது!
பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டர் கும்பல் கைது!

திருச்சி தரமணியிலுள்ள பேபி நகரில் ஆண்கள் விடுதி வைத்து நடத்தி வந்தவர் முரளி கிருஷ்ணா (35). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய வாடகை கட்டடத்தில் செயல்பட்ட விடுதியை விரிவுப்படுத்துவதற்காக, கடன் வேண்டி வங்கிகளை அணுகியுள்ளார்.

இந்நிலையில் Tata Capital Finance Service Ltd., என்ற நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி தொடர்பு கொண்ட நபர்கள் அடமானமின்றி கடன் தருவதாக கூறியுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னுடைய வங்கி கணக்கில் முன் தொகையை டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர்.

அதை நம்பிய முரளி 4 லட்சம் ரூபாய் கடன் தேவைப்படுவதாக கூறி அதற்கு முன் பணமாக ரூ 20,000 பணத்தை செலுத்தியுள்ளார். மேலும், இன்சூரன்ஸ் உள்ளிட்ட இதர காரணங்களை கூறியதன் அடிப்படையில் அவ்வப்போது சிறுக சிறுக பணத்தை செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்த முரளி கிருஷ்ணா கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் திருச்சி தில்லை நகரில் போலி கால் சென்டர் இயங்கி வந்ததும் அதன் மூளையாக செயல்பட்டு வந்த அமர்நாத்(30) சஞ்சய் (27) சையத் அப்துல்லா(27) ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் மூவரையும் விசாரணை செய்ததில் மூவரும் நிதி நிறுவனம் போன்றே போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகளை தயார் செய்தும், மேலும் அடமானமின்றி லோன் தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், இவர்களிடமிருந்த மோசடிக்கு பயன்படுத்திய மடிக்கணினிகள், செல்ஃபோன்கள், ஏடிஎம் கார்டுகள், மோசடி பணத்தில் வாங்கப்பட்ட இரண்டு கார்கள், தங்க நகைகள் உள்ளிட்ட சில ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தற்போது கரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி பலர் ஆன்லைன் மூலம் கடன் தருவதாகவும், வேலை வாங்கி தருதல், திருமண தகவல் மையம் என பல காரணங்களை கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் ஆன்லைன் மேற்கொள்ளும் பணபரிவர்த்தணைகளில் பாதுகாப்புடன் இருக்குமாறும், சந்தேகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நேரடியாக அணுகி உறுதி செய்து கொள்ளுமாறும் அடையாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details