திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் வசித்துவருபவர் ராமச்சந்திரன் (45). இவர் சுங்கத் துறை அலுவலகத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்துவந்தார். இவரது மனைவி வினிதா (34). இவர்களுக்கு ராகுல் (13) என்ற மகனும், ராஜஸ்ரீ (8) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்தனர்.
குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால், தனது குடும்பத்துடன் ராமச்சந்திரன் நவல்பட்டு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளார். பின்னர் அங்கு தனது மகனை தங்கவைத்துவிட்டு, தனது மனைவி, மகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார்.