தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் 3 நாள் புறா பந்தயப் போட்டி தொடக்கம்: பல்வேறு வகையான புறாக்கள் பங்கேற்பு - திருச்சியில் புறா பந்தயம் தொடக்கம்

திருச்சியில் மூன்று நாள் புறா பந்தயப் போட்டி இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. பந்தயத்தில் பல்வேறு வகையான புறாக்கள் கலந்து கொள்ள உள்ளன.

திருச்சியில் 3 நாள் புறா பந்தயப் போட்டி தொடக்கம்
திருச்சியில் 3 நாள் புறா பந்தயப் போட்டி தொடக்கம்

By

Published : Jun 17, 2022, 8:06 PM IST

திருச்சி:திருச்சி மாநகர மாபெரும் புறா பந்தயப் போட்டி இன்று(ஜூன்17) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில், உறையூர், எடத்தெரு, மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதிகளைச் சேர்ந்த புறா வளர்ப்பவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டி இன்று திருவானைக்காவல் உயர் நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. கர்ண புறா, சாதாரண புறாக்களுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன.

இன்று சாதாரண புறாக்களுக்கான போட்டி காலை 7 மணிக்குத் தொடங்கி, 7 மணி நேரம் நடைபெற்றது. இதில் 25 ஜோடி புறாக்கள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெறும் புறாவிற்கு ரூபாய் 12,001 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. முன்னதாக இப்போட்டியில் பங்கேற்பவர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ. 2500 செலுத்த வேண்டும். போட்டியின் விதிமுறைகள் குறித்து புறா உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பாபா பாலாஜி விழா குழுவினர் சார்பில் புறா பந்தயப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

திருச்சியில் 3 நாள் புறா பந்தயப் போட்டி தொடக்கம்

இதையும் படிங்க: கோலாப்பூரில் காணப்பட்ட நாட்டின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details