திருச்சி மாவட்டம் சிறுகனூர் முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ். குவைத்தில் புணிபுரிகிறார். இவரது மகன் முகமது ஆசீப்.(12). மகள் ஆசிரா பானு(11). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆதம்ஷா. இவரது மகள் ரிஜிவானா பேகம் (7). 3 குழந்தைகளையும் பீவி என்கிற மூதாட்டி அருகில் உள்ள வாய்க்காலில் குளிக்க அழைத்து சென்றுள்ளார்.
அப்போது வாய்க்காலில் மண் அள்ளிய பள்ளம் தெரியாமல் அடுத்தடுத்து 3 குழந்தைகளும் நேரில் மூழ்கினர். குழந்தைகள் 3 பேரும் மூழ்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வந்து மூழ்கிய குழந்தைகளை மீட்டனர்.