கரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கிண்டல் செய்யும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோரை கிண்டல் செய்து மீம்ஸ், டிக்டாக் போன்றவற்றில் புகைப்படம், வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் திருச்சியில் பிரதமர் மோடியை அவதூறாகச் சித்தரித்து டிக் டாக் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த டிக் டாக் வீடியோவை மூன்று சிறுவர்கள் வெளியிட்டிருந்தனர். அது சமூக வலை தளங்களில் வைரலானது.