திருச்சி:பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய தலம் என்றழைக்கப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் பெயரில் சிவபெருமான் நாமம் உள்ள போதிலும், இங்கு அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கே அதிகப்படியான மகிமையுண்டு.
கொடியேற்றம்
திருக்கோயிலின் பங்குனி பெருவிழாவான மண்டல பிரம்மோற்சவத்தின் தொடக்கமாக இன்று பெரிய கொடியேற்றம் மகாதுவஜாரோஹன நிகழ்வு மார்ச் 11ஆம் தேதி இன்று காலை மீன லக்னத்தில் 6.45 மணிக்கு மேல் 8 மணிக்குள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் அத்தருணத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி உடன் ஜம்புகேஸ்வரர் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். பெரும்திரளான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து வரும் 22ஆம் தேதியன்று சந்திரசேகரர் பட்ட தினத்தில், ஏக சிம்மாசனத்தில் 4ஆம் பிரகாரம் புறப்பட்டு, திக் பந்தனம் கண்டருளல், 28ஆம் தேதி சோமாஸ்கந்தர் பட்ட தினத்தில் எட்டு திக்கு கொடியேற்ற விழா ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
அலங்காரத்தில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் அதன்படி, 3 மற்றும் 4ஆம் பிரகாரம் வலம் வருதல், ஏப்ரல் 1ஆம் தேதி தெருவடைச்சான் விழாவும், 2ஆம் தேதி திருத்தேர் விழாவும், 6ஆம் தேதி வெள்ளைச்சாற்றி கொண்டாடப்படும்.
மேலும் 16ஆம் தேதி பஞ்சப்பிரகாரவிழா (ஐந்து பிரகாரங்களும் வலம் வருதல்) 18ஆம் தேதி மண்டலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க: அங்கப்பிரதட்சணம் செய்த பக்தர்களைத் தாண்டி சென்ற பண்ணாரி அம்மன் கோயில் சப்பரம்!