நெருங்கிவரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைவர்கள், அந்தந்த தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சிவராசு வேட்பு மனுவை பெற்றுக்கொண்டார். திருநாவுக்கரசருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் அன்பரசன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதில் முன்னாள் அமைச்சர் நேரு, மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தின் இதயம் போன்று திகழ்கின்ற திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.