தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மணலை கயிறாக திரிக்கவும் முடியாது; பெரியார் சிலையை அகற்றவும் முடியாது" - திருச்சியில் திருமாவளவன் அதிரடி! - thirumavalavan condemns annamalai statement

திருச்சியில் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் தலைமையில், தேசம் காப்போம் மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டி பல்வேறு கூட்டணித் தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், மாநாடு நடப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக விமானம் மூலம் திருமாவளவன் இன்று (நவ.11) திருச்சி வந்தார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 7:19 PM IST

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்

திருச்சி:டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள 'தேசம் காப்போம் மாநாடு' தொடர்பான இடத்தை தேர்வு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் இன்று (நவ.11) திருச்சி வந்தார். மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "வருகின்ற டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி ஜனநாயகம் வெல்லும் மாநாடு ஒன்றை ஒருங்கிணைக்க உள்ளோம். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, டி.ராஜா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக திமுக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கு பெறுகின்றனர்.

வேங்கைவயல் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிலர் ஒத்துழைக்க மறுப்பதாக கருத்து சொல்லப்பட்டுள்ளது. முழு நடவடிக்கைகளும் விரைவில் நடைபெற்று, விரைந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்துகிறது. அவர்களால் கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா?

தமிழ்நாட்டில் பாஜக கட்சியின் கூட்டங்களுக்கு ஒரு சதவீதம் கூட கட்சியினர் வருவதில்லை. அதுதான் எதார்த்தமான உண்மை. அவர்கள் கூட்டணி கட்சியிடமும், சாதி அமைப்பினரும் ஆள் பிடிக்கிறார்கள். மணலை கயிறாக திரிப்போம், வானத்தை வில்லாக வளைப்போம் என்று சொல்லுகிற கூற்றைப் போல் இது இருக்கிறது. அவரால் பெரியார் சிலையை அகற்றவும் முடியாது, மணலை கயிறாக திரிக்கவும் முடியாது. இது பரபரப்புக்காக ஊடக கவனத்தில் இருப்பதற்கான பேச்சாகும். தமிழகத்தில் இதெல்லாம் எடுபடாது என தெரியும்.

நாடாளுமன்ற தேர்தல் வரை இவரது பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும். அதன் பிறகு யாரும் இருக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பாஜக-வுடன் கூட்டணியில் இருக்கும் பாமக-வும் இது குறித்து கருத்து தெரிவித்து வந்துள்ளனர். இது குறித்து உங்களின் நிலை என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அடையாளங்களோடு தான் பாமக துவங்கியது. இன்றும் அதே அடையாளங்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. பெரியாரை விமர்சிக்கிறபோது, அவர்கள் அமைதியாக இருந்தால் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதைத்தொடர்ந்து, முன்பு மோடி ஹிந்தி மொழியை திணிப்பது போல் தற்போது தமிழ் மொழியை திணித்து வருகிறார், மேலும் உலகம் முழுவது தமிழ் மொழியை புகழடையச் செய்கிறார் என பாஜகத் தொண்டர்கள் கூறுவருகின்றனர் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, " மோடி அரசாங்கம் வருவதற்கு முன்பே தமிழ் மொழி உலக மொழியாக இருந்தது. மூத்த மொழி, இதற்கெல்லாம் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"ராகிங் செய்தால் வாழ்க்கை பறிபோகும்" - எச்சரிக்கும் வழக்கறிஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details