தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்த குழுந்தை உயிரிழப்பு - child fell into pot of water

திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் தண்ணீர் பானைக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்த குழுந்தை பரிதாப உயிரிழப்பு
தண்ணீர் பானைக்குள் தவறி விழுந்த குழுந்தை பரிதாப உயிரிழப்பு

By

Published : Jun 10, 2022, 9:38 AM IST

திருச்சி: திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஒரு வயது குழந்தையான ஹரிஷ் , தண்ணீர் பானைக்குள் விழுந்த சோப்பை எடுப்பதற்காக குனிந்தபோது தலைகீழாக கவிழ்ந்து உள்ளான்.

அதனை ஹரிஷ் குடும்பத்தினர் கவனிக்கவில்லை. சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஹரிஷ் தண்ணீருக்குள் தலைகீழாக கவிழ்ந்து உள்ளது தெரியவந்தது. உடனடியாக ஹரிஷை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கிரைண்டரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details