திருச்சி:மணப்பாறை அடுத்த கத்திகாரன்பட்டி கிழக்கு தெருவைச்சேர்ந்தவர், முருகேசன். இவர் தனது அம்மா மற்றும் மனைவி, குழந்தையுடன் கூட்டுக்குடும்பமாக காலனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்தபோது சுமார் இரண்டு மணியளவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இதில் முருகேசனின் தாயார் அஞ்சம்மாளின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்டு பதறிய முருகேசன் தனது தாயை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அஞ்சம்மாளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து திருச்சி மருத்துவமனை மருத்துவர்கள் முகப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி அவரை உள் நோயாளியாக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து முருகேசன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘நாங்கள் வசிக்கும் இந்த வீடு 1993ஆம் ஆண்டு இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத்திட்டத்தின்கீழ் கட்டிக்கொடுக்கப்பட்டது.கடந்த எட்டாம் தேதி இரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து எனது அம்மாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். இது குறித்து நேரில் வந்து பார்வையிட்ட எம்எல்ஏ பழனியாண்டி மனு கொடுங்கள், சரி செய்து தருகிறேன்’ என்று கூறிச்சென்றார்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டிக்கு பலத்த காயம் இதே போல் எங்கள் பகுதியில் உள்ள 11 வீடுகளும் மிகுந்த சேதம் அடைந்துள்ளது என்றும், அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும், இதனால் தனக்கு நடந்தது போல் மற்ற குடும்பத்தினருக்கு நடந்து விடக்கூடாது எனக் கூறி தனது அம்மாவை எண்ணி கண்ணீர் விட்டு அலுவலர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க:வாட்ஸ் ஆப் வைத்தியத்தால் விபரீதம் - செங்காந்தள் கிழங்கு சாப்பிட்ட இளைஞர் பலி