தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆவணம் மூலம் ரூ.87 லட்சம் மோசடி.. அம்பலமானது எப்படி?

திருச்சியில் போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் ரூ.87.5 லட்சம் மோசடி செய்த முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.87.5 லட்சம் மோசடி: வங்கி முன்னாள் மேலாளர் கைது
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.87.5 லட்சம் மோசடி: வங்கி முன்னாள் மேலாளர் கைது

By

Published : Nov 24, 2022, 6:48 PM IST

திருச்சி:பாரதியார் சாலை ஜென்னிபிளாசாவில் உள்ள இந்தியன் வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீமதி. இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது, "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்தவர் சண்முகராஜா. இவர் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

தற்சமயம் மேலசிந்தாமணி காவேரி நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் சில வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் போல் போலியான ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்து, பணம் மற்றும் தங்க நகைக்கடன் மூலமாக ரூ.87 லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆகவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் கோசலைராமன், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து முன்னாள் மேலாளர் சண்முகராஜாவை கைது செய்தார். இந்த மோசடியின் எதிரொலியாக சண்முகராஜா வங்கியிலிருந்து ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்காசி எம்.எல்.ஏவுக்கு சொந்தமான டிராக்டர் மோதி சிறுவன் பலி!

ABOUT THE AUTHOR

...view details