திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயியான இவர், துவரங்குறிச்சியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது உறவினர் ஒருவருடன் 18 சவரன் நகையை மூன்று லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளார்.
பின்னர், பணத்தை பெற்றுக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார், அப்போது துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் இவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் இருவர், சாலையில் உங்கள் பணம் கிடப்பதாக கூறினர்.