தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெண்டைக்காயை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்.. காவல்துறை மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு.. - today latest nws in tamil

fall in the price of Okra: திருச்சியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

fall in the price of Okra
வெண்டைக்காயை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் காவல்துறை மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 2:31 PM IST

திருச்சி: விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி அய்யாற்றுடன் இணைக்க வேண்டும், ஆலடியாறு டேமில் துளையிட்டு பொன்னியாறு டேமில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில் நிலங்களில் தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்தும் விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டும் கிராமங்களில் குளிர் சாதன கிடங்கை அரசே கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், 100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டும். காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 39வது நாளான இன்று (செப். 4) வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததை கண்டித்து மத்திய, மாநில அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை வலியுறுத்தி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வெண்டைக்காய் மாலை அணிவிக்க முயற்சி செய்ததால் காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து, சாலைகளில் வெண்டைக்காயை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அண்ணா சிலையின் மீது வெண்டைக்காயை தூக்கி எறிந்து போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது, "தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் முன்னிறுத்திய கோரிக்கையின் மீது மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வெண்டக்காயின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைனையும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் வாக்குவாதம் செய்து தள்ளு முள்ளு நடத்தினர். இதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருக்கு போராட்டம் தொடரும். உடனடியாக மாநில அரசு மற்றும் மத்திய அரசு விவசாயிகளின் நலனை சார்ந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:25 பைசா கொடுத்தால் புடவை.. துணிக் கடையில் குவிந்த இல்லத்தரசிகள்!

ABOUT THE AUTHOR

...view details