தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் கமிஷனர் அலுவலகம் முன்பு தர்ணா

திருச்சி: இட பிரச்னையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறையை கண்டித்து ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் கமிஷனர் அலுவலகம் முன்பு போராட்டத்தி்ல் ஈடுபட்டார்.

ஆட்டோ டிரைவர்

By

Published : Apr 16, 2019, 2:09 PM IST


திருச்சி பிராட்டியூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார்-நித்யா தம்பதி. இவர்களது வீட்டின் அருகே சோபனா என்பவர் குடும்பத்துடன் வசித்துவருகின்றார். இந்நிலையில் இந்த இரு குடும்பத்தினருக்கும் கடந்த சில நாட்களாக இட பிரச்னை இருந்துள்ளது. இதையடுத்து நேற்று மீண்டும் இரு குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் ராஜ்குமாரின் மனைவியை சோபனா தம்பதியினர் தாக்கியதில் நித்யா படுகாயமடைந்துள்ளார்.

ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் கமிஷர் அலுவலகம் முன்பு தர்ணா

பின்னர் அவரது கணவர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் சோபனா குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தனது குடும்பத்துடன் கமிஷனர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details