தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநிலங்களுக்கிடையே மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது - அப்துல் மஜீத் - பொதுச்செயலாளர் அப்துல் மஜீத்

திருச்சி: மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் குற்றஞ்சாட்டினார்.

திருச்சி

By

Published : Aug 18, 2019, 1:45 PM IST

திருச்சி விமான நிலையம் அருகே, காமராஜ் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குஜராத், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பலர் உயிரிழந்தனர். வீடு, உடமைகளை மக்கள் இழந்துள்ளனர். எனவே, இதனை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வெள்ள பாதிப்புக்கு உதவி செய்வதில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு வகையாகவும், இதர மாநிலங்களுக்கு ஒரு வகையான நிலைப்பாட்டை கடைபிடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

பேரிடர் காலங்களில், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் மீது மத்திய அரசு கவனம் செலுத்தாமல், முத்தலாக், காஷ்மீர் பிரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது. பலர் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது.

மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு பாகுபாடு பார்க்கிறது என்று எஸ்டிபிஐ கட்சி தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத்

மக்கள் விரும்பாத இந்தி போன்ற மொழிகளை திணிக்க முயற்சி செய்கிறது. ஆந்திராவிலிருந்து தெலங்கானா வேண்டும் என்று அந்த மாநில மக்கள் விரும்பினர் அதன் காரணமாக தான் பிரிக்கப்பட்டது. ஆனால் தற்போது காஷ்மீர் மக்கள் கோரிக்கை வைக்காமலேயே காஷ்மீரை பிரித்துள்ளனர்.

ஆகவே, மக்களின் விருப்பத்தை அறிந்து மத்திய அரசு செயல்பட வேண்டும். இப்படி சர்வாதிகாரப் போக்கில் முடிவுகளை எடுக்கக் கூடாது, என்றார்.

ABOUT THE AUTHOR

...view details