திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிளகுபாறை அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவிலிருந்து தப்பியோடிய பண முதலைகளை பாஜக அரசு மீட்கவில்லை - முத்தரசன் குற்றச்சாட்டு! - cash crocodiles
கறுப்புப்பணம் மீட்கப்பட்டு வங்கிக்கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமலும் இந்தியாவிலிருந்து பண முதலைகள் தப்பியோடிய நிலையில் அவர்களிடம் இருந்து பணமும் மீட்கப்படவில்லை என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் திருச்சியில் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ’பாஜக பொறுப்பேற்று எட்டு ஆண்டுகளில் ஏராளமான தலைகுனிவுகளும் அவமரியாதையும் ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற கொள்கை சீர்குலைந்த நிலையில் உள்ளது. சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய அவலநிலையும், பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது. பணமதிப்பிழப்பில் இருந்து மக்கள் இன்று வரை மீள முடியவில்லை.
விவசாய விரோதச் சட்டமும் அதனை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் ஆகும். கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்கும் திட்டம் தொடங்கப்படாமல், அதேநேரம் வேலையில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். வேலைவாய்ப்பு குறித்து இதுவரையிலும் பிரதமர் மோடி பேசுவதே இல்லை.
கறுப்புப் பணம் மீட்கப்பட்டு வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், அதேநேரம் பண முதலைகள் தப்பியோடிய நிலையில் அவர்களிடம் இருந்து பணமும் மீட்கப்படவில்லை. 16 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு முறை மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. கடைமடை வரை நீர் செல்ல ஏதுவாக தூர்வாரும் பணிகள் முழுமையடைய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விதைநெல், உரங்கள், கடன் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ எனவும் தமிழ்நாடு அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தூய்மை இந்தியா திட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கப்போகும் சென்னை ஐஐடியின் கழிவு எரிப்பு ஆலை!