தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி ஆட்சியரிடம் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய யாசகர்! - கையேந்தி யாசகம்பெற்று வரும் யாசகர்

பூல் பாண்டியன் என்ற யாசகர் தனக்கு யாசகமாக கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை இலங்கைத் தமிழர்கள் துயர்நீக்க உதவிபுரிய திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார்.

திருச்சி ஆட்சியரிடம் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய யாசகர்
திருச்சி ஆட்சியரிடம் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய யாசகர்

By

Published : May 31, 2022, 11:00 PM IST

தூத்துக்குடி:ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர், பூல்பாண்டி. மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குடும்பத்தினரைவிட்டு பிரிந்து ஆங்காங்கே யாசகம்பெற்று ஜீவனம் செய்துவரும் இவர், தனதுதேவைக்கான பணம்போக எஞ்சியபணத்தை கல்வி மற்றும் ஏனைய மக்கள்பணிகளுக்காக தானமாக வழங்கிவருகிறார்.

அந்தவகையில் கரோனா காலத்தில் மக்கள்படும் துன்பத்தையறிந்து யாசகம் பெற்று அவர்களின் துயர்நீக்கப் பணம் உதவிபுரிந்ததுடன், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளின் சீரமைப்புக்காகவும், மாணவர்களின் கல்விக்காகவும் யாசகம் பெற்று உதவிபுரிந்தார்.

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினை சீர்செய்ய இந்தியா சார்பில் மற்றும் தமிழ்நாட்டின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும்நிலையில், பொதுமக்களும் இலங்கைத்தமிழர் துயர்நீக்க உதவிபுரிய முதலமைச்சர் கோரிக்கைவிடுத்ததையடுத்து யாசகர் பூல்பாண்டியன் பொதுமக்களிடமிருந்து கையேந்தி தான் யாசகம்பெற்ற தொகையான 10ஆயிரம் ரூபாயை இன்று(மே31) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

சேர்த்து வைக்கும் பழக்கமில்லையென்று கூறும் இவர் இதுவரையிலும் கரோனா காலத்தில் 5 லட்சத்து 20ஆயிரம்வரை உதவிசெய்ததாக கூறும் யாசகர், முதலமைச்சரிடம் இந்தத்தொகையினை வழங்கமுயன்று அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டதாகவும், அதிகாரிகளும் தன்னுடைய யாசக பணத்தைப்பெற்றுக்கொள்ள மறுத்து அங்கே இங்கே என்று அலையவிட்டதாகவும் அதன்பின்னரே திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இப்பணத்தை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார், யாசகர் பூல்பாண்டியன்.

திருச்சி ஆட்சியரிடம் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய யாசகர்

இதையும் படிங்க:ரூ.10,000 கரோனா நிவாரண நிதி வழங்கிய யாசகர்

ABOUT THE AUTHOR

...view details