தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பள்ளி கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பச்சிளம் ஆண் சிசு! - Tiruchy district News

திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவின் சடலத்தை மீட்டு திருவெறும்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பள்ளி கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பாசிளம் ஆண் சிசு..!
அரசு பள்ளி கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பாசிளம் ஆண் சிசு..!

By

Published : Dec 8, 2022, 6:25 PM IST

திருச்சி: திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் காவல் துறையினர், இறந்து கிடந்த ஆண் சிசுவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் குழந்தை பிறந்ததா? அல்லது வெளியில் பிறந்த ஆண் சிசுவை பள்ளி கழிவறையில் வீசிச் சென்றனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்திர தேவநாதன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளியில் விசாரணை நடத்தினர். இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி வளாகத்தில், இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக பள்ளியில் போதுமான பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் மற்றும் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவினைப் பொருத்த வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மதத்தை கொண்டு வராதீர்கள் - வேலூர் இப்ராஹிம்

ABOUT THE AUTHOR

...view details