மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட 55 கிராமங்களில் தம்பிதுரை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த தேர்தலில் யார் மத்தியில் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணிவைத்து வெற்றி பெறுவதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெறமுடியும். இந்திய இராணுவத்தை அனுப்பி ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும்.
காங்கிரஸின் கை கறை படிந்தது: தம்பிதுரை - கரூர்
கரூர்: ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற காங்கிரஸின் கை கறை படிந்த கை என கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
Durai
காங்கிரஸின் கை கறைபடிந்த கை. அன்றுஇலங்கை தமிழர்களை கொலை செய்யஇந்திய ராணுவத்தை அனுப்பியவர்களுக்கு ஓட்டு போடுவதா என மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். நான் எனக்காக ஓட்டு கேட்கவில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்துக்காகவும்,பல்வேறு நலத்திட்டங்களை செய்த ஜெயலலிதாவுக்காகவும்தான் கேட்கிறேன்” என்றார்.
Last Updated : Mar 31, 2019, 2:56 PM IST