திருச்சி:மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த நல்லுச்சாமி மனைவி பாப்பு (68). இவர் தினமும் அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டிற்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்வார்.
அதேபோல் இன்று அதிகாலை காட்டு பகுதிக்கு பாப்பு சென்றார். அங்கிருந்து ஓடி வந்த மர்ம ஆசாமி பாப்பு கழுத்தில் இருந்த 7½ பவுன் தாலி செயினை அறுத்துக் கொண்டு ஓடி உள்ளார். உடனே மூதாட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார்.