தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவது அரசின் கடமை - வெல்லமண்டி நடராஜன் - நல்லாசிரியர் விருது

திருச்சி: மாவட்டத்தைச் சேர்ந்த 14 ஆசிரியர்களுக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நல்லாசிரியர் விருது வழங்கினர்.

நல்லாசிரியர் விருது
நல்லாசிரியர் விருது

By

Published : Sep 7, 2020, 7:06 PM IST

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் 14 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி வரவேற்றார். ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் 14 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன்பின் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், "சென்னையில் 350 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது திருச்சியில் இந்த விழா நடைபெற்று உள்ளது.

மாணவர்களுக்கு வாழ்ந்து வழி காட்டக் கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்த சமுதாயத்தின் தேவைக்கு ஏற்ப மாணவர்களை மாற்றி கொடுக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர். அத்தகைய ஆசிரியர்களை பெருமைப்படுத்துவது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.

ஆசிரியரின் தர மேம்பாட்டிற்கு அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. கரோனா காலத்திலும் ஆசிரியர்கள் தொண்டு ஆற்றியது மிகவும் போற்றுதலுக்கு உரியதாகும்" என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், "ஆசிரியர்களின் பணியை யாரும் மதிப்பீடு செய்து அளவிட முடியாது. ஆசிரியர் பணி என்பது வாழ்வாதார பணியாகும். கல்வி மட்டும் கற்பிப்பது ஆசிரியர்கள் பணி அல்ல. மனிதனை முழுமையான மனிதனாக மாற்றக்கூடியது கல்வியாகும்" என்றார்.

விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

திருச்சி குமுளுரில் உள்ள மாவட்ட ஆசிரியர்
கல்வி பயிற்சி விரிவுரையாளர்
அன்புச்செல்வன்.

முசிறி துலையாநத்தம் அரசு ஆதிதிராவிடர் நல
மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி
இயக்குநர் ஹரிஹரராமச்சந்திரன்.

திருச்சி சேவா சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சுகிர்தா பாய்.

அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் முஹம்மது பாரூக்.

சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை
உஷா.

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ்.

இ.ஆர். மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ராமகிருஷ்ணன்.

பொன்மலைப்பட்டி டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி டெய்சி ராணி.

தாராநல்லூர் அலங்க விலாஸ் சிங்காரப்பிள்ளை நினைவு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை உதயராணி.

திருவெறும்பூர் கைலாசபுரம் தமிழ் பயிற்றுமொழி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி.

வையம்பட்டி முகவனூர் புனித சிசிலியா தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியை
எமல்டா ராணி.

உப்பிலியபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி.

முசிறி ஜெயங்கொண்டான் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி.

திருச்சி ஏர்போர்ட் ஆதம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆரிபா அப்துல்லா.

ABOUT THE AUTHOR

...view details