தென்னிந்திய திருச்சபையின் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியைகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் 10 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியைகளை கொண்ட அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டிக்கு திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியும், வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியும் தேர்வாகின.
திருச்சியில் ஆசிரியைகளுக்கான கைப்பந்து போட்டி! - champion
திருச்சி: பள்ளி ஆசிரியைகளுக்கான கைப்பந்து போட்டியில் பிஷப் ஹீபர் பள்ளி ஆசிரியைகள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.
teachers handball
இறுதிப்போட்டியில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி அணி வெற்றி பெற்றது. திருச்சி மறைமாவட்ட தலைவர் தங்கையா, வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும், பரிசும் வழங்கினார். இந்த விழாவில் வெஸ்ட்ரி பள்ளி தலைமையாசிரியர் சைமன் சுகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்திய திருச்சபை பள்ளி ஆசிரியைகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.