தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 700 இளைஞர்களுக்கு காவல் பணி மறுப்பது சரியல்ல'- வேல்முருகன்

சிறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 700 இளைஞர்களுக்கு காவல்துறையில் பணி மறுப்பது சரியல்ல என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன்
வேல்முருகன்

By

Published : Oct 12, 2021, 3:14 PM IST

திருச்சி:திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆய்வு கூட்டம் நேற்று (அக்.11) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் கலந்துகொண்டார்.

அதன் பின் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை திணித்து வருகிறது. விவசாயிகள் டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தும் இதுவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததற்கு வன்மையாக கண்டிக்கிறோம்.

உபி சம்பவம் - இணையமைச்சர் பதவி விலக வேண்டும்

உத்தரப் பிரதேசம் மாநிலம் விவசாயிகள் கொல்லப்பட்டது குறித்து பேசிய அவர், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இது எதிர்காலத்தில், மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும். வேளாண் படிப்புகளுக்கு மாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், அரசு அனைவருக்கும் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தர மறுப்பதும், நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி அனுப்பியுள்ளதை இதுவரை ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்வதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இவை அனைத்தும் பாசிசத்தின் உச்சம்.

சுங்க சாவடிகள் அகற்ற வேண்டும்

செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் படி யாரும் பேச வேண்டாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகள் அகற்றப் பட வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் தர வேண்டும். ரவிச்சந்திரனுக்கு பிணை வழங்க வேண்டும். இலங்கை அகதிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கியுள்ளதற்கு நன்றி.

சிறிய பிரச்சினைகளுக்காக, குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவலர் உடற்பயிற்சி தேர்வில் தகுதி பெற்றும் கிட்டத்தட்ட 700 பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டும் வழக்கின் காரணமாக பணி கிடைக்காதவர்களுக்கு பணி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அண்ணாமலைக்கு சவால்

தொடர்ந்து, வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியாதவர்கள் தான் அதை எதிர்க்கிறார்கள் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன், “வேளாண் சட்டங்கள் குறித்து ஓரளவு தெரியும் என்ற வகையில், இச்சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது. வேளாண் சட்டங்கள் குறித்து அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்க தயார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானது.

ஜெயங்கொண்டத்தில் நிலக்கரி எடுக்க மக்கள் நிலங்களைத் தர தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வடமாநிலங்களில் வழங்கப்படுவது போன்று உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பை என்.எல்.சி நிர்வாகம் தர தயாராக இல்லை என்பதே உண்மை" என்று கூறினார்,

இதையும் படிங்க: 'நிலக்கரி தட்டுப்பாடு... தமிழ்நாட்டில் அவசர காலத் திட்டம் அவசியம்'

ABOUT THE AUTHOR

...view details