தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2022, 10:32 AM IST

Updated : May 17, 2022, 11:59 AM IST

ETV Bharat / state

பாஜகவில் இணைந்தார் வேல்முருகனின் மனைவி... அடுத்தது யார்?

ஒரு கட்சியை உடைத்து தொண்டர்களைத் தூக்குகிற கட்சிய பாத்து இருக்கோம், குடும்பத்தையே உடைத்து தொண்டர்களைத் தூக்குகிற கட்சிய இப்போதுதான் பார்க்கிறார்கள் தமிழ்நாடு மக்கள். ஆம், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மனைவி காயத்ரி பாஜகவில் இணைந்துள்ளார்.

tamizhaga-vazhvurimai-katchi-party-leader-velmurugan-wife-gayatri-joined-bjp நான் வளர்கிறேனே மம்மி... OR இன்று  வேல்முருகன் மனைவி.. நாளை ஐஜேகே பாரிவேந்தர், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி..
tamizhaga-vazhvurimai-katchi-party-leader-velmurugan-wife-gayatri-joined-bjp நான் வளர்கிறேனே மம்மி... OR இன்று வேல்முருகன் மனைவி.. நாளை ஐஜேகே பாரிவேந்தர், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி..

பாரம்பரிய காங்கிரஸ் தொண்டரான குமரி ஆனந்தன் வீட்டிலிருந்து அவரது மகளான தமிழிசையை பாஜகவில் இணைத்ததில் தொடங்கிய வரலாறு, அதன் பின் திமுகவின் ஆணிவேர் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளரான அன்பழகன் வீட்டிலிருந்து அவரது பேரனையும், திமுகவின் நிரந்தர எம்பி திருச்சி சிவா வீட்டிலிருந்து அவரது மகன் சூர்யாவையும் தூக்கியதைக் கடந்த காலங்களில் கண்டோம்.

இதோ தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வீட்டிலிருந்து அவரது மனைவி காயத்ரியையும் பாஜக தொண்டர்களாக இணைத்தது தொடர்கிறது. தமிழ்நாட்டில் பாஜக புகுந்திடுமா என முழக்கமிட்டவர்களின் வீட்டிலேயே பாஜக புகுந்தது தான் ஹைலைட் என சிலாகிக்கிறார்கள் பாஜகவினர்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மனைவி காயத்ரி பாஜக இணைத்த போது

வேல்முருகனுக்கும் அவரது மனைவி காயத்ரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், காயத்திரி தனது பாதுகாப்பு குறித்து தனக்கு நெருக்கமான சிலரிடம் அச்சம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக காயத்ரியை தங்கள் அணிக்கு இழுத்துள்ளது.

ஐஜேகே பாரிவேந்தர், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

வரும் காலங்களில் இந்த கரங்கள் ஐஜேகே பாரிவேந்தர், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என நீளும் என கண்ணை சிமிட்டி கைகொட்டி கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். ஆக நான் வளர்கிறேனே மம்மி என்ற குரல் கமலாலயத்தில் பலமாகக் கேட்கிறது.

இதையும் படிங்க: தமிழணங்கா? "ஸ"மஸ்கிருத அணங்கா? - அண்ணாமலை அளித்த விளக்கம்

Last Updated : May 17, 2022, 11:59 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details