தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அச்சம்: விடுமுறை கேட்டு தமிழ்நாடு காகித ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு காகித ஆலை ஊழியர்கள் ஆர்பாட்டம்

திருச்சி: கரோனா அச்சம் காரணமாக தமிழ்நாடு காகித ஆலை ஊழியர்கள் அனைவருக்கும் 15 நாள்கள் விடுமுறை வழங்க வேண்டும் என ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tamilnadu Paper mill
Tamilnadu Paper mill

By

Published : May 15, 2021, 9:56 PM IST

திருச்சி மாவட்டத்தில், கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா அச்சம் காரணமாக, தமிழ்நாடு காகித ஆலை ஊழியர்கள் அனைவருக்கும் 15 நாள்கள் விடுமுறை வழங்க வேண்டும் என நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இது சம்பந்தமாக காகித ஆலை நிர்வாகம் சார்பில், எந்தவித அறிவிப்பும் அறிவிக்கவில்லை. இதனையடுத்து பணி நேரம் முடிந்து வெளியே வந்த ஊழியர்கள் விடுமுறை அளிக்க வலியுறுத்தி, காகித ஆலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ஆலை நிர்வாகிகள் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையடுத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details