தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதில் கெட்டிக்காரர்கள்  - அமைச்சர் தங்கமணி - மகளிர் குழு சேர்க்கை முகாம்

திருச்சி: தேர்தல் என்று வந்தாலே திமுகவை பொறுத்தவரை எப்படியாவது பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என வாக்குறுதிகளை கொடுப்பதில் கெட்டிக்காரர்கள் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Tamilnadu electricity board minister
Minister Thangamani speech

By

Published : Dec 11, 2020, 6:09 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை தொகுதி அளவிலான வாக்குச்சாவடிகளில் மகளிர் குழு சேர்க்கை முகாம், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வருகை தந்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மகளிர் குழுவினருக்கு வாக்குச்சாவடி உறுப்பினர் கையேட்டை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் தங்கமணி "இன்னும் மூன்று மாதங்களில் தேர்தலை சந்திக்க இருக்கின்றோம், தேர்தல் என்று வந்தாலே திமுகவை பொறுத்தவரை எப்படியாவது பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என வாக்குறுதிகளை கொடுப்பதில் கெட்டிக்காரர்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து பவுன் வரை அடமானம் வைத்து நகைக் கடன் வாங்கியவர்களின் கடனை தள்ளுபடி செய்வதாக கூறினார், இதை நம்பி பெண்கள் நகையை அடமானம் வைத்தீர்கள், அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றுவிட்டார்கள் அடமானம் வைத்த நகைகள் வங்கியிலேயே இருக்கிறது.

அதைப் போல் மீண்டும் நீங்கள் ஏமாந்து விடக்கூடாது, சொல்வதை செய்கின்ற இயக்கம் அதிமுக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறும் இயக்கம் திமுக" என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குமார், சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details