தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஈரோடு இடைத்தேர்தலில் நாங்க தான் ஜெயிக்கிறோம்.." - அமைச்சர் கே.என்.நேரு

இடைத்தேர்தலில் ஈரோடு தொகுதியை தோழமைக் கட்சிகளுக்கு வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாண்பை காத்துள்ளார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

By

Published : Jan 25, 2023, 5:01 PM IST

"ஈரோடு இடைத்தேர்தலில் நாங்க தான் ஜெயிக்கிறோம்.." - அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏறத்தாழ ஆயிரத்து 519 பயனாளிகளுக்கு 937 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "ஈரோடு இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். திமுக நிச்சயம் வெற்றி பெறும். அதற்காகப் பணிகளை நாங்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டோம்.

ஒன்றரை ஆண்டுகள் காலம் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிக்கின்றோம். ஈரோடு நகரத்தைப் பொறுத்தவரையில் அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருக்கிறோம். திமுக நல்ல நிலையில் இருக்கின்றது.

ஈரோடு இடைத்தேர்தலில், அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி, தோழமை கட்சிகளின் மாண்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காத்து இருக்கிறார். நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டோம், தேர்தலுக்கு போகிறோம். நாங்கள் தான் ஜெயிக்கிறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை'' என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை ஏன் ஆதரிக்கிறோம்?: கமலின் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details