தமிழ்நாடு

tamil nadu

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு: அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

By

Published : Mar 5, 2022, 5:14 PM IST

Published : Mar 5, 2022, 5:14 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி:மறைந்த முன்னாள் திருச்சி மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவுமாகிய அன்பில் தர்மலிங்கத்தின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (மார்ச் 5) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திருச்சி வி.என் நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் படத்திற்கு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் கூட்டணிக் கட்சி மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவார்கள். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையுமின்றி, மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வு எழுத வேண்டும். மனநிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

கரோனா தொற்று பரவல் காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு பெற்றி பெற்றுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்போம் - அமைச்சர் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details