திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்குச் சென்றுவிட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. குழிதோண்ட எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
30 மணி நேரத்தை தாண்டி தொடரும் மீட்புப் பணி! - 25 மணி நேரத்தை தாண்டிய மீட்புப் பணி
திருச்சி: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 30 மணி நேரத்தை தாண்டியது.
surjith recover team
இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மீட்டர் அகலத்தில் 100 அடி ஆழத்தில் குழி தோண்டப்படும். குழிதோண்டிய பின்னர் கண்ணதாசன், திலீப் குமார் மணிகண்டன் ஆகிய வீரர்கள் குழந்தையை மீட்க குழிக்குள் இறங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக அவசர சிகிச்சையளிக்க அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக் கடந்தும் குழந்தை இன்னும் மீட்கப்படாதது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Oct 26, 2019, 11:43 PM IST