தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூரியூரில் 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்! - பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு

திருச்சி: சூரியூரில் 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி
திருச்சி

By

Published : Jan 13, 2021, 6:34 PM IST

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்படுகிறது. சூரியூர் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் சிவராசு அனுமதி அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) செந்தில்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிடுவதற்காக வரும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு ஜல்லிக்கட்டு கமிட்டியினருக்கு அறிவுரை வழங்கினார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் கலந்துகொள்வதற்கு உரிய டோக்கன்கள் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த டோக்கன்களை தனிப்பட்ட முறையில் யாருக்கும் அவர்கள் தர மாட்டார்கள் என்றும் கூறினார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொண்டு சான்றிதழ் அளித்தால் மட்டுமே அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! விழா ஏற்பாடுகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details