திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுர்ஜித் அசைவின்றி இருந்த நிலையில், தற்போது அவர் தனது கையை அசைத்துள்ளார். இதனால், பொதுமக்களுக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. சுஜித் நல்ல முறையில் மீட்கப்பட வேண்டும் என்பதே ஏகோபித்த மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.
ஆழ்துளைக் கிணற்றில் 'கை' அசைத்த குழந்தை! - நம்பிக்'கை'யோடு தொடரும் மீட்புப் பணி - திருச்சி சுஜித்தின் தாயார் கதறி அழும் காட்சி
திருச்சி : ஆழ்துளைக் கிணற்றில் அசைவின்றி கிடந்த குழந்தை சுர்ஜித் தற்போது கையை அசைத்துள்ளது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அசைவுடன் காணப்படும் குழந்தை
கிணற்றில் விழுந்து 17 மணிநேரத்திற்கு மேலே ஆகியுள்ள நிலையில் மீட்புக்குழுவினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
தற்போது குழந்தையை மீட்க நெய்வேலி நிலக்கரி சுரங்கக் குழு சம்பவ இடத்திற்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
Last Updated : Oct 26, 2019, 9:00 PM IST