கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து துவரங்குறிச்சிக்கு சுமார் 3 அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி பிரிவு சாலை பகுதி வழியாக செல்லும் இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் கால்வாயில் ஓடி வீணானது.
கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் அடிக்கடி நிகழும் உடைப்பு - நீர் வீணாகும் அவலம்! - பல லட்சம் லிட்டர் தண்ணீர்
திருச்சி: மணப்பாறை அருகே கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கால்வாயில் ஆறாக ஓடி வீணானது.
காவிரி கூட்டு குடிநீர் குழாய்
இதனால் மணப்பாறை, துவரங்குறிச்சி, பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் நிலவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழாய் பொருத்தப்பட்டு பல வருடங்களை கடந்துவிட்டதால், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.