திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெட்டியில் வட்டாரப் போக்குவரத்து பகுதிநேர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர் ராணி தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் சுமார் 3 மணி நேரமாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மணப்பாறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை- ரூ.43 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்!!! - bribery
திருச்சி : மணப்பாறை வட்டாரப் போக்குவரத்து பகுதிநேர அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் அதில் கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆய்வின் முடிவில் ரூபாய் 43 ஆயிரம் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும், மேலும் ஆய்வின்போது மோட்டார் வாகன ஆய்வாளர், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் ஆகியோர் அலுவலகம் உள்ளே இருந்ததாகவும், இதில் கைபற்றிய ரொக்கம் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளருக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.