திருச்சி பொன்மலைப்பட்டியில் திருஇருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் போராட்டம்!
திருச்சி: தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை என முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
பின்னர், பள்ளிவாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் முன்னாள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர், கல்வி அலுவலர்கள், பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோர் உறுதியளித்த பின்னரே மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக பள்ளியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.